ஆரோக்கியம்
ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜுஸ்

• பூமிக்கு அடியில் வளரும் வகையை சார்ந்த பீட்ரூட் ஆனது தன்னுள் பல்வேறு அற்புதங்களை அடக்கியது. பீட்ரூட் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தரும் என்பதை இங்கே பார்க்கலாம்.
• உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜுஸை அடிக்கடி குடிப்பது நல்லது.
• கலோரிகள் குறைவாகவும், பூஜ்ஜிய கொலஸ்ட்ரால் கொண்ட சில உணவுகளில் பீட்ரூட் முக்கியமான ஒன்றாகும். இதனால் கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் பீட்ரூட் சாற்றை அருந்தலாம்
• பீட்ரூட் ஜுஸ் எடுத்துக்கொள்வதால் உடலில் ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
• இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
• தோலின் நிறம் பளபளக்க பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக்கொண்டால் சருமத்தின் நிறம் மெருகேறும்.
• பீட்ரூட் ஜுஸ் கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.
•வயதாக வயதாக ஏற்படும் கண்புரை, தோல் சுருக்கம் மற்றும் மறதி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.
• பீட்ரூட் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும்.
• பீட்ரூட் ஜூஸ் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
• உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவை(ரத்தசோகை) பீட்ரூட்டில் உள்ள குணநலன்கள் தடுக்கிறது.
• பீட்ரூட் சாறில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும்.
• கர்ப்பிணிப் பெண்களுக்கு பீட்ரூட் சாறு, நன்மை பயக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
• பீட்ரூட் ஜூஸை பருகும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி இதில் கொழுப்பு சத்து கிடையாது.
• தலைமுடியின் நலம் என்பது உடலின் நலத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. சிலருக்கு முடி அடர்த்தி குறைந்து வலுவற்று கிடக்கும். அதற்கு பீட்ரூட் சாற்றை தலையில் தேய்க்க நல்ல மாற்றம் காணலாம்.
• பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும். பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.













