வணிகம்
HAL லாபம் சரிவு: பங்குகள் 4% உயர்வு! வரி வழக்கில் தீர்வும்…!

HAL நிறுவன லாபம் குறைந்தும், பங்கு விலை உயர்வும்: காலாண்டு முடிவில் முக்கிய தகவல்கள்!
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான (Q4FY25) முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, நிகர லாபம் 8% குறைந்து ரூ.3,977 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.4,309 கோடியாக இருந்தது.
இருப்பினும், பங்கு சந்தையில் இதற்கு எதிரான தாக்கம் ஏற்பட்டது. NSE-வில் HAL பங்கு விலை 4% உயர்ந்து ரூ.4,798 என்ற உச்சத்தைத் தொட்டது. இது முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய் குறைவாக இருந்தாலும் லாபத்தில் வித்தியாசம்
2025ஆம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் நிறுவன வருவாய் ரூ.13,700 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.14,769 கோடியிலிருந்து குறைவாகும். ஆனால், வரிக்குப் பிந்தைய லாபம் Q3FY25 இல் இருந்த ரூ.1,440 கோடியுடன் ஒப்பிடும் போது 176% அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.
முழு நிதியாண்டு நிலவரம்:
மொத்த நிகர லாபம்: ரூ.8,364 கோடி (10% அதிகரிப்பு)
செயல்பாட்டு வருவாய்: ரூ.30,981 கோடி (2% அதிகரிப்பு)
செலவுகள்: ரூ.9,150 கோடி (கடந்த ஆண்டில் இதே காலத்தில் ரூ.9,543 கோடி)
வரி வழக்கில் முக்கிய தீர்வு:
1986–87 முதல் 2017–18 வரை நிலவிய விற்பனை வரி சிக்கலை மகாராஷ்டிரா அரசுடன் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துள்ளது. இதனால், பழைய ரூ.10,018.41 கோடி வரி கோரிக்கை தற்போது ரூ.2,737.24 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்திய ரூ.266 கோடியை கழித்தும், HAL தற்போது ரூ.2,471 கோடி செலுத்தியுள்ளது.







