ஆன்மீகம்
12 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச ராசியான கடகத்தில் குருபகவான்: கோடி நன்மை பெறும் 4 ராசிகள் யார்?
Published
3 நாட்கள் agoon
By
Poovizhi
நவகிரகங்களில் மிகுந்த சுபபலன்களை வழங்கும் கிரகமாகக் கருதப்படுபவர் குருபகவான். அதனால் தான் ஜோதிடத்தில் “குரு பார்க்க கோடி நன்மை” என்ற பழமொழி பரவலாக கூறப்படுகிறது. குருபகவானின் ராசி மாற்றம் ஒவ்வொரு முறையும் பலரின் வாழ்க்கையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
அந்த வகையில், தற்போது குருபகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவிருக்கிறார். இந்த பெயர்ச்சி 2026 ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் அக்டோபர் 31, 2026 வரை குருபகவான் கடக ராசியிலேயே இருப்பார். இந்த காலகட்டத்தில் மிகவும் சுபமானதாகக் கருதப்படும் “ஹன்ஸ் ராஜயோகம்” உருவாகும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அரிய கிரக நிலை மாற்றம் காரணமாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி முன்னேற்றம், செல்வ வளம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கப்போகின்றன.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகப்பெரிய அதிர்ஷ்ட காலமாக அமையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குறிப்பாக காதல் மற்றும் திருமண விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். விரும்பியவரை திருமணம் செய்யும் வாய்ப்புகளும் உருவாகலாம்.
வேலை தொடர்பான தடைகள் நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நிதி நெருக்கடிகள் குறைந்து, கடன் சுமைகள் படிப்படியாக விலகும். உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலம் முன்னேற்றமும் பணவரவும் நிறைந்ததாக இருக்கும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் புதிய திட்டங்கள் மூலம் அதிக லாபம் கிடைக்கலாம். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த பெயர்ச்சி நிதி வளர்ச்சியை அதிகரிக்கும். வியாபாரத்தில் வருமானம் உயரும். முதலீடுகள் நல்ல பலன் தரக்கூடும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். தொழில் மற்றும் பணியிடங்களில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்த சாதனைகள் படைப்பார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி பல்வேறு நன்மைகளை வழங்கும். புதிய வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகம் உருவாகலாம்.
குடும்ப உறவுகள் வலுப்பெற்று, அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். வேலை பார்க்கும்வர்களுக்கு புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

ரோகிணி நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சி: மே 24 முதல் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்!

கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 13 வரை அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்!

மேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன் 2026: ஜூன் 2 முதல் அதிர்ஷ்ட காலம்.. பதவி உயர்வு, பணவரவு அதிகரிக்கும்!

குருப்பெயர்ச்சி 2026 சிம்ம ராசிபலன்: பணவரவு, தொழில் முன்னேற்றம், அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும் காலம்!

சனி – ராகு – கேது அரிய நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்.. பணம், பதவி, லாபம் குவியும்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!



















