ஆன்மீகம்
குருப்பெயர்ச்சி 2025: கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் எச்சரிக்கையும் கூடிய காலம்!

2025 குருப்பெயர்ச்சி: கும்பம் ராசிக்கு குருவின் பார்வையில் அதிர்ஷ்டமும், முதலீட்டில் எச்சரிக்கையும்!
2025ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி திருக்கணிதப்படி இரவு 10.30 மணி அளவில் குருபெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்த முறை குரு பகவான் ரிஷபம் ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது அனைத்து ராசிகளின் வாழ்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
கும்பம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஐந்தாம் இடத்திற்கு சென்று அமருகிறார். இது புத்திர ஸ்தானம் என்பதால் குழந்தைகள் சார்ந்த நன்மைகள் அதிகம். கல்வி, வெளிநாட்டு வாய்ப்புகள், பணியில் உயர்வு போன்றவை கைகூடும். மேலும், ஒன்பதாம் இடத்தையும் (பாக்ய ஸ்தானம்) பார்வை இடமிட்டதால் தந்தை வழி ஆதாயங்கள், புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
நன்மைகள்:
கல்வி, வெளிநாடு செல்லும் வாய்ப்பு
தந்தை வழி சொத்து பிரச்னைகள் தீர்வு
உத்யோகம், தொழிலில் வளர்ச்சி
மனநிறைவு, நம்பிக்கை அதிகரிக்கும்
சுப காரியங்கள், செல்வாக்கு உயர்வு
எச்சரிக்கைகள்:
பேராசை காரணமாக ஏற்பட்ட முடிவுகள் இழப்பாகலாம்
வாக்குக் கொடுக்கும் முன் நன்றாக யோசிக்க வேண்டும்
முதலீட்டில் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்
உடல்நலத்தில், குறிப்பாக ஜீரண பிரச்னைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான கவனிப்பு தேவை
வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருங்கள்
பரிகார வழிபாடு:
சந்திர வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு, குருபகவானுக்கு விரதம், துதிகள் பாராயணம் செய்வது நன்மை தரும்.



















