தமிழ்நாடு
மே மாதம்.. மதுரை.. நாள் குறித்த எடப்பாடி பழனிசாமி.. சிங்கப்பாதையில் செல்லும் அதிமுக 2.0

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்த டிசம்பர் – ஜனவரி மாதம் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மோதல் இத்தனை மாதங்கள் கழித்து இப்போதுதான் முடிவிற்கு வந்து உள்ளது. ஒரு வழியாக அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அந்த பொதுக்குழு வழக்கில் 3 முக்கிய அம்சங்கள் சொல்லப்பட்டு உள்ளன.
1. அதிமுக பொதுக்குழு நடந்தது செல்லும்.
2. அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும். அதாவது ஓ பன்னீர்செல்வம் இப்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை.
3. அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்தான் இப்போது ஒற்றை தலைமை.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவர் பெரிய அளவில் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். விரைவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆக உள்ள அவர் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவிப்பார். ஏப்ரல் இறுதிக்குள் தேர்தலில் போட்டியின்றி எடப்பாடி வெல்வார். அதன்பின் மே மாதம் பொதுக்கூட்டம் நடக்கும் என்கிறார்கள்.

#image_title
இந்த பொதுக்கூட்டம் மதுரையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் வலிமையாக இருக்கும் எடப்பாடி தென் மண்டலத்தை குறி வைத்து இந்த பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளாராம். அதிமுக தனக்கு கீழ் வந்துவிட்டதை அறிவிக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் அவர் இந்த கூட்டத்தை நடத்த போவதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் பலர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவுவார்கள் என்றும் கூறப்படுகிறது.