தமிழ்நாடு
கருணாநிதி சிலை வைக்க நீதிமன்றம் தடை உத்தரவு: திமுகவினர் அதிர்ச்சி

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க போவதாக வெளியான செய்தியை அடுத்து இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கிரிவல பாதை ஆக்கிரமிப்பு செய்து மாவட்ட நிர்வாகம் கருணாநிதி சிலை வைக்க பீடம் கட்டியுள்ளனர் என்றும் இந்த சிலை வைக்கப்பட்டால் மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும் கடும் போக்குவரத்து நெரிசல் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் வாதிடப்பட்டது.
இந்த மனுவை எதிர்த்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிட்ட போது இந்த விவகாரத்தில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்றும் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லாத இது போன்ற பிரச்சினையை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் கிரிவலப்பாதையில் கருணாநிதி செய்த சிலை வைக்க தடை விதிப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் அந்த இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வரும் 19ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.