தமிழ்நாடு
இணையத்தை மூழ்கடித்த சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! யார் இந்த ஜேக்கப்?

நேற்றைய தினம் சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்டாலின் ஜேக்கப் புகைப்படங்கள் தான் ஆக்கிரமித்து இருந்தது. இந்த செய்தி பொய்யாக இருக்க கூடாதா என பலரும் சோகம் ததும்ப பதிவிட்டு ஒரு புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும் இளைஞனின் புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.

#image_title
அந்த புன்னகை பூத்த முகத்துக்கு சொந்தக்காரர் ஸ்டாலின் ஜேக்கப். சாலை விபத்தில் சிக்கி தனது உயிரை இழந்தார் நேற்று. இவரது மரணத்துக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, எம்பி, எம்எல்ஏக்கள் என திமுக முக்கிய தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கலில், நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும் எனத் தெரிவித்துள்ளார்.
31 வயதான ஸ்டாலின் ஜேக்கப் கோவையை சேர்ந்தவர். புகைப்படம் எடுப்பதலில் ஆர்வம் கொண்ட இவர் பகுதி நேர வேலையாக இதனை செய்து வருகிறார். வாட்ட கருவாட் என்ற கிளவுட் கிச்சனை நடத்தி வந்த ஜேக்கப் உணவு டெலிவரியையும் செய்துவந்தார். இதில் சோகச்செய்தி என்னவென்றால் நேற்று முன்தினம் தான் தனது பிறந்தநாளை கொண்டாடினார் ஜேக்கப். பிறந்தநாளை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்த புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த சூழலில்தான், சாலை விபத்தில் நேற்று சிக்கி லாரி மோதி தூக்கி வீசப்பட்டார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.