கிரிக்கெட்
பாலியல் தொல்லை கொடுத்த இலங்கை வீரர் மலிங்கா: சின்மயி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தவறாக நடந்துகொண்டதாக பிரபல பாடகி சின்மயி கூறியுள்ளார். ஏற்கனவே பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சின்மயி.
பிரபல பாடகி சின்மயி பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக பல பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் கொடுத்த பாலியல் தொல்லைகளை பட்டியலிட்டு வருகிறார். இந்நிலையில் பெண் ஒருவருக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா கொடுத்த பாலியல் தொல்லை குறித்த பதிவை ஷேர் செய்துள்ளார் சின்மயி.
அதில், சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் மும்பையில் இருந்தேன். அப்போது நான் தங்கியிருந்த ஹோட்டலில் தங்கியிருந்த என் தோழியை தேடினேன். அப்போது ஐபிஎல் போட்டிகளில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து உங்கள் தோழி என் அறையில் இருப்பதாக கூறி அழைத்தார்.
ஆனால் அங்கு என் தோழி இருக்கவில்லை. அப்போது என்னை படுக்கையில் அவர் தள்ளி என் முகம் அருகில் வந்தார். நான் எனது கண்ணையும், வாயையும் மூடிக்கொண்டேன். அவர் எனது முகத்தை பயன்படுத்தினார். அவர் நல்ல வாட்டசாட்டமாக இருந்ததால் என்னால் அவரை எதிர்க்க முடியவில்லை. அப்போது அந்த ஹோட்டலின் ஊழியர் கதவை தட்டினார்.
அவர் கதவை திறந்த உடன் நான் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டேன். இதை வைத்து அவர் பிரபலம் என்பதால் நான் வேண்டுமென்றே அவரது அறைக்கு சென்றதாக சிலர் கூறலாம் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா என சின்மயி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




















