தமிழ்நாடு
பாஜவுக்காக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் 30 பிரபலங்கள் யார் யார்?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் கிடைத்திருந்தாலும் 20 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறப் போகிறது என்பதும் முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தனது உறுப்பினர்களை பாஜக அனுப்புமா என்றும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரசியல் வல்லுனர்களின் கருத்துக்கணிப்பின்படி 5 முதல் 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தல் முடிவு வந்தால் தான் இந்த கருத்துக் கணிப்புகளின் உண்மை தன்மை வெளிப்படும்.
இந்த நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் 30 பிரபலங்கள் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இராணி, ஜெய்சங்கர், விகே சிங், யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான், சிடி ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
மேலும் தமிழக பிரபலங்களான கே டி ராகவன், சசிகலா புஷ்பா, நடிகை கௌதமி, நடிகர் ராதாரவி, நடிகை காயத்ரி, சிவாஜியின் மகன் ராம்குமார் கணேசன், நடிகை விஜயசாந்தி, நடிகர் செந்தில் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.





















