வணிகம்
இந்தியாவின் முதல் நேரடி ஆப்பிள் சாதனங்கள் சில்லறை விற்பனை கடை விரைவில் திறப்பு!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரீமியம் ஐபோன், மேக் கணினி, லேப்டாப் உள்ளிட்டவற்றுக்கு அதிக டிமாண்ட் உள்ளது.
ஆனால் இதுவரையில் ஆப்பில் நிறுவனத்திற்கு என இந்தியாவில் நேரடி விற்பனை நிலையங்கள் என எதுவும் இல்லை.
இப்போது இந்தியாவின் முதல் ஆப்பில் சில்லறை விற்பனை கடை விரைவில் திறக்கப்பட உள்ளது. அதற்கான ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என ஃபினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு பக்கத்தில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வேலை செய்ய ஆட்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதுவரையில் வேலைவாய்ப்புக்கான சமூக வலைத்தளம் என அழைக்கப்படும் லிங்கிடுஇன் தளத்தில் சிலர் தமுக்கு ஆப்பில் இந்தியா ஸ்டோரில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஆப்பிள் நிறுவனம் தங்களது நேரடி விற்பனை நிலையங்களைத் திறக்கும் போது அது 1000 கணக்கான இந்தியர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கும்.