தமிழ்நாடு
கலைஞர் இருந்திருந்தால் அண்ணாமலை ஆட்டுக்குட்டி மேய்த்துக்கொண்டிருப்பார்: விளாசிய ஆ.ராசா!

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி ஆ.ராசா கலைஞர் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு மேய்த்துக்கொண்டிருப்பார் என விமர்சித்தார்.

#image_title
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, 100 ஆண்டுக்கால ஆளுமையில் சாதி தெரியாமல் படிக்கிற நிலையை கொண்டுவந்தது திமுக தான். தத்துவங்கள் தான் கையில் உள்ளது, தலைவர்கள் இல்லை. பெரியார், அண்ணா, கலைஞர் இருந்திருந்தால் அண்ணாமலை ஆட்டுக்குட்டி மேய்த்துக்கொண்டு இருந்திருப்பார்.
வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், நீட் போன்ற சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றுகிறது. ஆனால், நம் தமிழ்நாடு சட்டமன்றம் அதை எதிர்த்து தூக்கி எறிகிறது. அத்தகைய வலிமை உள்ளவர் நம் முதல்வர். நல்ல தத்துவத்திற்கு நல்ல தலைவன் வேண்டும். திராவிட தத்துவத்திற்கு ஒரு நல்ல தலைவன் கிடைத்துள்ளார் அவர் தான் ஸ்டாலின் என்று தெரிவித்தார் ஆ.ராசா.