Connect with us

தமிழ்நாடு

எடப்பாடியை கிழி கிழி என கிழித்த பாஜக: உடைகிறதா அதிமுக கூட்டணி?

Published

on

தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது அதிமுக-பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அமர் பிரசாத் ரெட்டி அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

#image_title

சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணையும் போது பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தார். அவரை அதிமுக அரவணைத்துக்கொண்டது பாஜகவை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமாவை அறிவித்தார்.

இந்நிலையில் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரும் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டரில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை!

நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?

கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டை என கூறியவர்களை வாக்காளர்கள் வெளியேற்றியுள்ளனர். 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது மூச்சு விடுவதற்கான அறிகுறி கூட இல்லை, கோட்டை பிடிப்பதை மறந்து விடுங்கள். தமிழகத்தின் ஒரே எதிர்காலம் பாஜகதான். இவ்வாறு தனது கூட்டணி கட்சியான அதிமுகவையும் அதன் தலைமையையும் மிக கடுமையாக விமர்சித்துள்ளார் அமர் பிரசாத் ரெட்டி. இது இரு கட்சிக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?