கிரிக்கெட்
கொரோனா பரவல் எதிரொலி: 2 ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தினமும் மூன்றரை லட்சத்துக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சப்பட்டு வருகின்றன. அமெரிக்கர்கள் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே அமெரிக்கா எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக பெங்களூரு அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்பா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகிக்கொள்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இருவரும் விரைவில் நாடு திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோல் இன்னும் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


















