சினிமா செய்திகள்
‘லியோ’வை முந்திய ‘சூர்யா 42’!

நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தின் ப்ரீ- பிசினஸை ‘சூர்யா 42’ முறியடித்துள்ளது.
படத்தின் வெற்றி தோல்வி எனபதை எல்லாம் தாண்டி படத்தின் வசூல் என்பது ரசிகர்களிடையே பேசு பொருளாகி உள்ளது.
அதிலும் தற்போது ஓடிடி வளர்ச்சிக்கு பின்னர் படத்தின் ப்ரீ பிசினஸ் தொகை என்பது வர்த்தக வட்டாரத்தையும் தாண்டி ரசிகர்கள் மத்தியிலும் கவனிக்கத்தக்க அம்சமாக மாறியுள்ளது.
அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கெளதம் மேனன் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய படம் ‘லியோ’. அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் ஓடிடி, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமம் உள்ளிட்ட ப்ரீ பிசினஸ் தொகை 400 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Suriya 42
அதேபோல, ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 42வது படம் பான் இந்திய அளவில் கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இதில் 5 வெவ்வேறு விதமான தோற்றங்களில் சூர்யா நடிக்கிறார்.
கோவா, சென்னை என இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ பிசினஸ் தொகை 500 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது. ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’, ‘விக்ரம்’ படங்களுக்கு அடுத்து சூர்யாவின் மார்கெட்டும் அவரது ரசிகர்களும் இந்திய அளவில் அதிகரித்துள்ளதும் ‘சூர்யா 42’ பான் இந்திய அளவில் உருவாவது ஆகிய காரணங்களாலேயே இதன் ப்ரீ பிசினஸ் தொகை ‘லியோ’வை முந்தியுள்ளதாக சொல்கிறது சினிமா வட்டாரம்.