சினிமா
நடிகர் அல்லு அர்ஜூனின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியானது!

நடிகர் அல்லு அர்ஜூனின் அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ‘புஷ்பா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு எதிர்பார்ப்பு நிலவுகிறது. ’புஷ்பா’ முதல் பாகத்தில் எடிட் செய்யப்பட்ட பல போர்ஷன்கள் குறிப்பாக பகத் பாசிலின் காட்சிகள் அதிக அளவில் இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜூனின் அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோர் தங்களது அடுத்தப் படத்தை அல்லு அர்ஜூனுடன் அறிவித்துள்ளனர்.
மிகப் பிரம்மாண்டமான பொருட்ச்செலவில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, இணை தயாரிப்பாளர் ஷிவ் சனானா மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் சமீபத்தில் இந்த மிகப்பிரம்மாண்டமான படத்தை முறையாக சாத்தியப்படுத்த சமீபத்தில் சந்தித்துள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கும் சந்தீப் வாங்காவின் ’ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பை அல்லு அர்ஜூன் முடித்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.