தமிழ்நாடு
கொரோனா சமயத்தில் வீட்டில் இருந்தே பொதுச் சேவை செய்ய விருப்பமா..?- இதோ உங்களுக்கான வாய்ப்பு

இந்தியாவிலும் தமிழகத்திலும் கொரோனா தொற்றுப் பரவல் கடந்த சில வாரங்களாக மிக அதிகமாக இருந்து வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மாநகரத்தில் தொற்று, கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, வீட்டிலிருந்தே பணிபுரிய விரும்பும் தன்னார்வத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசு.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்:
– தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
– இணையதள வசதி இருக்க வேண்டும். லேப்டாப் மற்றும் மொபைல் போன் இருக்க வேண்டும்.
– கூகுள் ஷீட் தளத்தில் பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
– கூகுள் ஹேங்அவுட்ஸ் மூலம் கலந்துரையாடல்களில் பங்கேற்க்க நேரமிருக்க வேண்டும்.
-வீட்டில் இருந்தே பணி புரியும் சூழல் வாய்த்திருக்க வேண்டும்.
இந்த பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 கொரோனா நோயாளிகளை தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் பணி கொடுக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு:
கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிய விரும்பும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.@Mr_Sivashankar @Priyan_reports pic.twitter.com/FmgqHEtreZ
— Kannan Jeevanantham (@Im_kannanj) May 1, 2021
















