விளையாட்டு
ஒலிம்பிக்ஸில் தோற்ற கோபத்தில் டென்னிஸ் பேட்டை உடைத்த ஜோகோவிச்; மைதானத்தில் சிதறியோடிய நிர்வாக குழு

ஒலிம்பிக்ஸில் ஆடவருக்கான ஓற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் தோற்று பதக்கக் கனவைப் பறிகொடுத்தார் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச். இந்நிலையில் வெண்கலப் பதக்கத்துக்காக அவர் அலெக்ஸாண்டர் வெர்வுடன் போட்டியிட்டு, அதிலும் தோல்வி கண்டார்.
இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ஜோகோவிச், போட்டி முடிந்த பின்னர் தான் விளையாடிய டென்னிஸ் ராக்கெட்டை மைதானத்திலேயே உடைத்தெறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காம மைதானக் குழு, அவரின் செயலைக் கண்டு அஞ்சி சிதறி ஓடியது. இது குறித்தான வீடியோ இதோ:
If djokovic throwing and smashing his racquet in a third place match just for losing points isn’t the lack of the Olympic spirit idk what is . Losing your shit does not suit a world champion. That’s why he’ll never reach Federer and Nadal’s level.#TokyoOlympics2020 pic.twitter.com/mliSmPZYdz
— Nilay (@wyanilay) July 31, 2021
இந்த சம்பவம் பற்றி ஜோகோவிச், ‘நான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி செய்து விட்டேன். நானும் மனிதன் தான். என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி நான் செய்வது முதல் முறையல்ல. கடைசி முறையாகவும் இருக்காது.
இருப்பினும் இப்படியான செயலின் மூலம் தவறான முன்னுதாரணமாக இருப்பதற்கு வருந்துகிறேன். நான் இப்படியாகத் தான் இருக்கிறேன். நான் களத்தில் சரியாக செயல்படவில்லை. அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என்று வருத்தப்பட்டுக் கூறியுள்ளார்.






















