கிரிக்கெட்
337 இலக்கை அசால்ட்டாக எட்டிய இங்கிலாந்து: இந்திய பவுலர்களை பிரித்து மேய்ந்த பெயர்ஸ்டோ!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா கொடுத்த 337 என்ற இலக்கை 43.3 ஓவர்களில் அதிரடியாக எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 108 ரன்களும். ரிஷப் பண்ட் 77 ரன்களும். விராத் கோலி 66 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 337 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தால் 43.3 ஓவர்களிலேயே 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெயர்ஸ்டோ 124 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களும் ஜேசன் ராய் 54 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் இந்திய பவுலர்களை குறிப்பாக குல்தீப் யாதவ், க்ருணால் பாண்டியா பந்துகளை பென் ஸ்டோக்ஸ் மற்றும் பெயர்ஸ்டோ பிரித்து மேய்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. நேற்றைய ஆட்ட நாயகனாக பெயர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 28ஆம் தேதி புனே நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















