சினிமா செய்திகள்
இயக்குனர் எஸ்பி ஜெனநாதன் மருத்துவமனையில் அனுமதி: கவலைக்கிடம் என தகவல்!

பிரபல இயக்குனர் எஸ்பி ஜெனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மருத்துவமனை வட்டாரங்கள் இது குறித்து தகவல்கள் தெரிவித்த போது அவருடைய உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் எஸ்பி ஜெனநாதன் ’இயற்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார் என்பதும் அதன் பின் பேராண்மை, புறம்போக்கு என்னும் பொதுவுடமை உள்பட ஒருசில படங்களை இயக்கினார் என்பது தற்போது அவர் ’லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள ’லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ள நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



















