ஆரோக்கியம்
பரவும் புதிய வகை கொரோனா – தற்காத்துக் கொள்வது எப்படி?

பிரிட்டனில் தற்போது ஒரு புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
அந்த நாட்டுக்கான விமான சேவையை இன்று (டிச.22) நள்ளிரவு முதல் 31-ம் தேதி வரை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோதனை செய்த பிறகே, அது என்ன வகையான கொரோனா வைரஸ் என்பதை கண்டறிய முடியும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம் இப்போது தான் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் குறைந்து வருகிறது. மக்களும் அதனை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கியுள்ளனர். முடங்கியிருந்த பல்வேறு துறைகளும் இப்போது தான் மெல்ல எழத் தொடங்கியுள்ளன. எனினும், சில துறைகளில் வேலை வாய்ப்புகள் இன்னமும் அதிகரிக்கப்படாமல் உள்ளன.
நிலைமை இப்படியிருக்க, இப்போது புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் பரவி வருகிறது. அங்கு பரவுவதோடு மட்டுமில்லாமல், அங்கிருந்து சென்னை வந்திருக்கும் பயணிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை பார்த்ததுமே, ‘இனிமே பாடி தாங்காது சாமி’ என்ற மைண்ட் வாய்ஸ் பெரும்பாலானோர் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.
சரி இது ஒரு புறம் இருக்கட்டும். கொரோனா பற்றி மறக்கத் தொடங்கியிருக்கும் நம் மக்களுக்கு இந்த கொரோனா 2.0 சூழலில், மீண்டும் சில தற்காப்பு செய்திகளை தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவு மற்றும் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். வைட்டமின் ‘சி‘ போன்ற சத்தான மாத்திரைகளை சாப்பிடலாம். ‘ஆர்சனிக் ஆல்பம்‘ என்ற ஹோமியோபதி மாத்திரைகளை வாரம் 3 முறை அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். கபசுர குடிநீர் குடிக்கலாம்.
ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நோய் கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய நிகழ்வுகளில் 20-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடாமல் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் ஆகும். பொது இடங்களில் அதிகம் கூடவேண்டாம்.
இவையெல்லாம், நமக்கு முன்பே தெரிந்த ஒன்று என்றாலும், வரும் காப்பது என்பதே நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம்!.























