வணிகம்
2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!
Published
12 seconds agoon
By
Poovizhi
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சாவரின் கோல்ட் பாண்ட் (Sovereign Gold Bond – SGB) திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி, இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 386 சதவீதம் வரை வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்லாமல், முக்கிய முதலீட்டு வழியாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவசர காலங்களில் பாதுகாப்பான சொத்தாக இருப்பதால், தங்க முதலீட்டில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து 2015ஆம் ஆண்டு சாவரின் கோல்ட் பாண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தின.
தொடக்கத்தில் மக்கள் மத்தியில் சிறிய தயக்கம் இருந்தாலும், பின்னர் இந்த திட்டம் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்தது. எட்டு ஆண்டுகள் காலவரையுடன் வழங்கப்படும் இந்த தங்கப் பத்திர திட்டம் தற்போது பலருக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.
2018 மே மாதத்தில் ஆன்லைன் மூலம் ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.3,064 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதன் மதிப்பு ரூ.14,901 வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராமுக்கு மட்டும் ரூ.11,837 வரை லாபம் கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டுதோறும் 2.5 சதவீத வட்டி தனியாக வழங்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு இரட்டை லாபம் கிடைத்துள்ளது.
உதாரணமாக, ஒருவர் 2018ஆம் ஆண்டு இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், தற்போது அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.4,86,320 ஆக உயர்ந்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுபோன்ற அதிக லாபம் காரணமாக பலர் தற்போது மீண்டும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த திட்டம் மூலம் மத்திய அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி தற்போது புதிய தங்கப் பத்திர வெளியீட்டை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

2026 இறுதிக்குள் தங்கம் ரூ.2 லட்சம் எட்டுமா? UBS புதிய கணிப்பு – முதலீட்டாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: மாதம் ₹1000-ஐ இரட்டிப்பாக்கும் 4 சிறந்த சேமிப்பு வழிகள்!













