வேலைவாய்ப்பு
கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை வாய்ப்பு: டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
Published
7 மாதங்கள் agoon
By
Poovizhi
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநர் (Counselor) பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: ஆற்றுப்படுத்துநர் (Counselor)
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி:
Social Work, Sociology, Social Science, Psychology, Public Health, Counselling துறைகளில் பட்டம் அல்லது
PG Diploma in Counselling and Communication பட்டம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான அரசு/NGO அமைப்புகளில் ஒரு ஆண்டு அனுபவம் அவசியம்.
கணினி இயக்கும் திறன் கொண்டவர்கள் முன்னுரிமை.
வயது வரம்பு: 42 ஆண்டுகள் வரை
சம்பளம்: ரூ. 18,536
தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப முறை:
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.
தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
2ஆவது தளம், பழைய கட்டடம்,
மாவட்ட ஆட்சியரக வளாகம், கோயம்புத்தூர் – 641018
கடைசி தேதி: 10.10.2025
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















