ஆன்மீகம்
12 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நவபஞ்ச ராஜயோகம்: ரிஷபம், கடகம், விருச்சிகத்திற்கு அதிர்ஷ்டம்!

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு, புளூட்டோ கிரகத்துடன் சுக்கிரன் இணைந்து வலிமையான நவபஞ்ச ராஜயோகம் உண்டாக இருக்கிறது. கன்னி ராசியில் பிரவேணிக்கும் சுக்கிரன், மகர ராசியில் அமர்ந்திருக்கும் புளூட்டோவுடன் இணைந்து உருவாக்கும் இந்த அரிய கிரக நிலை மாற்றம், கடகம், ரிஷபம் மற்றும் விருச்சிக ராசியினரின் தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது.
நவபஞ்ச ராஜயோகம் வேத ஜோதிடத்தில் மிக முக்கியமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது தனி நபரின் ஜாதகத்தில் பொருளாதார மேம்பாடு, உயர்கல்வி வளர்ச்சி மற்றும் வாழ்க்கை வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரிஷபம்: திருமண காரியங்கள் மற்றும் கல்வி வளர்ச்சி
திருமண முடிக்காத ரிஷப ராசியினர் திருமண காரியங்களை விரைவில் முடிக்க வாய்ப்பு.
தூரத்து சொந்தம் வழியாக நல்ல வரன் கிடைக்கும்.
மாணவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப பரிசு பெறுவார்கள்; கலைத்துறையில் ஆர்வம் கொண்டோர் கலை நிகழ்ச்சிகளில் புகழ் மற்றும் வெற்றி பெற்றிடுவார்கள்.
அலுவலக பணியாளர் தொழிலில் புதிய பொறுப்புகள் ஏற்று முன்னேறுவார்கள்.
பொருளாதார நிலை மேம்படும், முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் காணப்படும்.
கடகம்: குடும்ப பிரச்சனைகள் தீர்வு
7வது வீட்டில் புளூட்டோ, 4வது வீட்டில் சுக்கிரன் மாற்றம்.
திருமண வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் உறவுகளின் நிதி தேவைகளை சமாளிக்க உதவும்.
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்கள் நற்செய்தியை எதிர்பார்க்கலாம்.
தொழிலில் தடைகள் நீங்கும், கணவன்-மனைவி இடையிலான மனஸ்தாபங்கள் குறையும்.
சமூக நிலை உயர்வு, நற்பெயர் மற்றும் மதிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம்: தொழில் முன்னேற்றம் மற்றும் நிதி ஆதாயம்
தொழில் வளர்ச்சியில் முக்கிய வாய்ப்புகள் கிடைக்கும்.
நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு, ஆக்கப்பூர்வமான திட்டங்களில் ஈடுபடும் வாய்ப்பு.
வருமானம் அதிகரித்து, செலவுகளை முறையாக பயன்படுத்தி எதிர்பார்த்த லாபம் காணப்படும்.
குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும்; வீட்டிற்கான புதிய பொருட்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் இருக்கும்.
காதல் வாழ்க்கை முன்னேறும், மன அமைதி மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.



















