சினிமா செய்திகள்
2021க்கு தள்ளிப்போன அவதார் 2!

வருவியா.. வரமாட்டியா.. வரலைன்னா உன் பேச்சுக் கா என்ற பாடல் தான் அவதார் படம் குறித்த அறிவிப்புகள் வரும்போது பாடத் தோன்றுகிறது.
2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நாம் கண்ட பேண்டோரா உலகை மீண்டும் எப்போது காண்போம் என்ற ஆவலில் 10 வருடங்கள் ஓடிவிட்டன.
ஆனால், இன்னமும் அடுத்த பாகம் வெளியாவதாக தெரியவில்லை. இந்நிலையில், அவதார் படக் குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அவதார் 2 ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாவது மாற்றம் செய்யப்படாமல் இருக்குமா? என்ற கேள்வியைத் தான் அவதார் ரசிகர்கள் கேமரூனை பார்த்து கேட்கும் கேள்வியாக இருக்கும்.
உலகளவில் வசூலில் சாம்ராஜ்யத்தை படைத்த அவதார் படத்தின் அடுத்த பாகம் வெளியாக இவ்வளவு கால தாமதம் ஆனாலும், அதற்கு ஏற்ற வொர்த் இருக்கும் என்றே அவதார் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாமும் காத்திருப்போம்!













