வணிகம்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய குழுக்கடன் திட்டம் அறிவிப்பு!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழக அரசு ₹25 லட்சம் வரை கடன் – முழு விவரம்!
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹25 லட்சம் வரை குழுக்கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம், 7% வட்டியில், 3 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வசதியுடன் அமைகிறது.
முக்கிய அம்சங்கள்:
இந்த குழுக்கடன் உதவி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) மூலம் வழங்கப்படுகிறது.
சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள், இந்த திட்டத்தின் பயனாளிகளாக இருக்கலாம்.
குழுவில் 20 பேர் வரை இருக்கலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக ₹1.25 லட்சம் கடனாக வழங்கப்படும்.
வட்டி மற்றும் காலக்கெடு:
வருடாந்த வட்டி: 7%
திருப்பிச் செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்
குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
தகுதிகள்:
வயது: 18 முதல் 60 வயது வரை
வருமானம்: ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள்
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்
விண்ணப்பிக்கும் இடங்கள்:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகங்கள்
மாவட்ட/மத்திய/நகர கூட்டுறவு வங்கிகள்
மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்
தேவையான ஆவணங்கள்:
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் (ஐடிக்கள்)
















