வணிகம்
EPS ஓய்வூதியம் உயருமா? நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்வி – மத்திய அரசின் பதில் இதோ!
Published
9 மாதங்கள் agoon
By
Poovizhi
EPS ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
EPS (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) என்பது EPFO சந்தாதாரர்களுக்கு ஓய்வுக்குப்பின் மாத ஓய்வூதியத்தை வழங்கும் மத்திய அரசின் திட்டமாகும். இது 1995-இல் தொடங்கப்பட்டது. பணியாளர் மற்றும் நிறுவனம் இருவரும் EPF-க்காக 12% பங்களிக்க, அதில் நிறுவன பங்களிப்பிலிருந்து 8.33% EPS-க்கு செல்கிறது.
தற்போது EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆக இருக்கிறது. ஆனால் பணவீக்கம், நிவாரண தேவைகள் ஆகியவற்றை முன்னிட்டு இதனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர் சங்கங்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து 2025 ஜூலை 24 அன்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:
EPS நிதி கட்டமைப்பு நிறுவன பங்களிப்பு (8.33%) மற்றும் மத்திய அரசு தரும் பட்ஜெட் ஆதரவு (1.16%) மூலம் நடைபெறுகிறது.
EPS-1995 இன் விதி 32-ன் கீழ் நிதி ஆண்டுதோறும் மதிப்பீடு நடத்தப்படுகிறது.
31.03.2019 நிலவரப்படி EPS நிதியில் ஆக்சுவேரியல் குறைபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, EPS ஓய்வூதியம் உயர்வு தொடர்பாக அரசு தற்போது எவ்வித உறுதிபூர்வ முடிவும் எடுக்கவில்லை. இருப்பினும், குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.
EPS கணக்கீடு:
EPS = (ஓய்வூதிய சம்பளம் × சேவை ஆண்டுகள்) / 70
இங்கு, அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் ₹15,000 வரை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தற்போதைய EPS குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹1,000, மேலும் அதிகபட்சம் ₹7,500 வரை பெற முடியும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

10 ஆண்டுகள் சேவை நிறைவடையவில்லையா? EPS ஓய்வூதியத் தொகையை எடுக்காதீர்கள் – ‘ஸ்கீம் சர்டிஃபிகேட்’ ஏன் அவசியம்?

EPS Pension Hike: இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியம் உயருமா? நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அளித்த பதில்!

10 ஆண்டுகளுக்குள் வேலையை விட்டு வெளியேறினால் EPS ஓய்வூதியம் கிடைக்குமா? – இபிஎஸ் ஓய்வூதியம் பற்றிய முழு விவரம்!

EPS-95 ஓய்வூதிய உயர்வு – இபிஎஃப் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசா?
EPS ஓய்வூதியம் ரூ.3,000 ஆக அதிகரிக்கப்படுமா? ஓய்வூதியதாரர்களுக்குப் பெரிய நிவாரணம் விரைவில்!

EPFO புதிய அறிவிப்பு: தனியார் துறையினருக்கு ஊதிய உச்சவரம்பு ரூ.21,000 ஆக உயர்வு!


















