வேலைவாய்ப்பு
சென்னையில் இந்திய விமான துறையில் நேரடி வேலை வாய்ப்பு – பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பு!

இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமான AAICLAS (Cargo Logistics & Allied Services Company Ltd.) நிறுவனத்தில் “Security Screener” பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு ஆகும்.
மொத்தமாக 227 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையிலேயே 176 இடங்கள் உள்ளன, எனவே தமிழக பட்டதாரிகளுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
பணியின் முக்கிய விவரங்கள்:
பதவி: Security Screener (Freshers)
அமைப்பு: AAICLAS – AAI வின் துணை நிறுவனம்
பணியிடங்கள்: மொத்தம் 227 | சென்னையில் மட்டும் 176
வேலை மாதிரி: ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis – 3 ஆண்டு வரை)
சம்பளம்:
1ம் ஆண்டு – ₹30,000
2ம் ஆண்டு – ₹32,000
3ம் ஆண்டு – ₹34,000
காலம்: 3 வருட ஒப்பந்தம்
தகுதிகள்:
ஏதேனும் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்
ஆங்கிலம், இந்தி அல்லது உள்ளூர் மொழியில் வாசிக்கவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 27 ஆண்டுகள் (இட ஒதுக்கீட்டு விதிகள் பொருந்தும்)
அனுபவம் தேவை இல்லை – Freshers விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை:
Shortlisting
Physical Test / Body Fitness Check
ஆவண சரிபார்ப்பு
இந்த மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர்களே இறுதியாக பணிக்கு தேர்வாகுவர்.
ஏன் இந்த வேலை சிறப்பு?
நேரடி அரசு வேலை வாய்ப்பு போன்ற உறுதிப்பத்திரம்
புதிய பட்டதாரிகளுக்கான வாய்ப்பு
விமான துறையில் அனுபவம் கிடைக்கும்
மிகுந்த நம்பிக்கைக்குரிய நிறுவனத்தில் வேலை


















