இந்தியா
துருக்கிக்கு ரூ.770 கோடி நஷ்டம்: இந்தியாவின் நேரடி தாக்குதலால் பெரும் ஆச்சரியம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலின் போது, பாகிஸ்தானுக்கு நேரடி ஆதரவு தெரிவித்த துருக்கிக்கும், அஜர்பைஜானுக்கும் தற்போது கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த மோதலில் இந்தியா மேற்கொண்ட துல்லியமான நடவடிக்கைகள் காரணமாக, துருக்கிக்கு மட்டும் ரூ.770 கோடி அளவிலான பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் மற்றும் முக்கியமான தளங்களை இந்தியா இலக்காகக் கொண்டு தாக்கியதை துருக்கி மற்றும் அஜர்பைஜான் கண்டித்து வெளிநாட்டுத் துறை ஊடாக குரல் எழுப்பின.
இதே நேரத்தில், இந்தியா தனது நடவடிக்கைகளை நீதி மற்றும் தற்காப்பு அடிப்படையிலேயே மேற்கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளது. துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகியவை பாகிஸ்தானுக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவின் சர்வதேச இமேஜ் அதிகரித்துள்ளதோடு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.















