வேலைவாய்ப்பு
நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம்: குமரியில் 2500 வேலைவாய்ப்புகள், 40+ நிறுவனங்கள் பங்கேற்பு!

நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம்: குமரியில் 2500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்!
தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்தில் நாளை (மே 24) மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாகர்கோவிலில் உள்ள பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்நிறுவனங்கள் தங்களிடம் உள்ள 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு செயல்பாடுகளில் ஈடுபட உள்ளன.
வேலைவாய்ப்பு முகாமை,
தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்
நாகர்கோவில் வேலைவாய்ப்பு அலுவலகம்
குமரி மாவட்ட நிர்வாகம்
மற்றும்நான் முதல்வன் திட்டம்
சார்பில் ஒருங்கிணைத்து நடத்துகின்றன.
மாவட்டம் முழுவதும் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைய உள்ளது.
இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


















