பர்சனல் ஃபினான்ஸ்
கிரெடிட் கார்டு பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் – முக்கிய தகவல்கள்!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களும், புதிதாக கிரெடிட் கார்டு பெற விரும்புபவர்களும் தங்கள் உரிமைகள் மீறப்படுகின்றன என்று சந்தேகிக்கும் நிலைக்கு வரலாம். இதை தவிர்க்கவும், தங்களின் உரிமைகளை பாதுகாக்கவும், கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகளை அறிந்துகொள்வது அவசியம்.
இந்தக் கட்டுரையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டு பயனர்களின் பாதுகாப்புக்காக வகுத்துள்ள முக்கியமான ஆறு விதிகளைப் பற்றி காணலாம்.
1. வட்டி வீதம்:
- கிரெடிட் கார்டுக்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும்.
- உயர்ந்த வட்டி வீதம் மற்றும் மறைமுகக் கட்டணங்கள் விதிக்க தடை.
- பயனர்களின் பணம்செலுத்தும் வரலாற்றினைப் பொருத்து வட்டி வீதங்களில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், இது பற்றிய தகவல் தெளிவாக வழங்கப்பட வேண்டும்.
2. துல்லியமான பில்லிங்:
- கிரெடிட் கார்டு பில்கள் சரியான நேரத்திலும் நியாயமான முறையிலும் தயாரிக்கப்பட வேண்டும்.
- தவறான பில் வருமானால், பயனர்கள் விளக்கம் கேட்கலாம்.
- பிரச்சினையைத் தீர்க்க 60 நாட்கள் அளவுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
- தாமதங்களைத் தவிர்க்க ஆன்லைன் பில்களை வழங்கும் நடவடிக்கையை RBI பரிந்துரைக்கிறது.
3. கடன் வசூல் நடைமுறை:
- கிரெடிட் கார்டு கடன் வசூலுக்கு தகுந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- கடன் வசூலுக்கு மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தகுந்த ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும்.
- பயனர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும்.
- மிரட்டல் அல்லது வன்முறையை பயன்படுத்துவது குற்றமாகும்.
4. தனியுரிமை பாதுகாப்பு:
- பயனர்களின் அனுமதியின்றி கட்டாயமாக கார்டுகளை வழங்க தடை.
- அனுமதியின்றி வழங்கப்படும் கார்டுகளுக்காக இரண்டு மடங்கு பிழை கட்டவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- Do Not Call Registry (DNCR) என்னும் பட்டியலில் உள்ளவர்களுக்கு விளம்பர அழைப்புகள் அனுப்புவது தவிர்க்க வேண்டும்.
5. அடையாள மற்றும் தகவல் பாதுகாப்பு:
- பயனர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பு விளம்பரத் தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதி இல்லை.
- பயனர் டிஃபால்டராகக் கருதுவதற்கு முன்பு அவர்களுக்கு முன்னறிவிப்பு அளிக்க வேண்டும்.
- பணத்தொகை செலுத்தும் நேரத்தை வழங்கி பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. மோசடி அறிக்கை:
- கிரெடிட் கார்டு மோசடி நடந்தால், மூன்று வேலை நாட்களுக்குள் அது பற்றிய தகவலை உங்கள் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.
- உங்கள் அலட்சியத்தால் ஏற்பட்டதாக இல்லையென்றால், நீங்கள் எந்தவித பொறுப்பும் ஏற்க வேண்டியதில்லை.
- ஏழு நாட்களுக்குப் பிறகும் தாமதமாக அறிவித்தால், உங்கள் வங்கியின் கொள்கையின்படி நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும்.






















