வணிகம்
2023-ம் ஆண்டு தினமும் 2700 டெக் ஊழியர்கள் பணிநீக்கம்.. எப்போது தான் இது முடிவுக்கு வரும்?

2023-ம் ஆண்டு டெக் ஊழியர்கள் பணிநீகம் மற்றும் ஃப்ரெஷர்களுக்கு வேலையினமை என மிக மோசமான ஆண்டாக அமைந்துள்ளது என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது.
டெக் நிறுவன ஜாம்பாவன்கள், யூனிகார்ன் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என எல்லோரும் தொடர்ந்து பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள்.
2023-ம் ஆண்டு தினமும் 2700 டெக் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரையில் மட்டும் 1.53 லட்சம் நபர்கள் வேலைநீக்கத்தால் பாதிக்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது டெக்னாலஜி நிறுவனங்களில் வேலைபார்த்து வரும் பலரும் சம்பள குறைப்பு அல்லது ஊதிய உயர்வு போன்றவை இல்லை என்றாலும், தனக்கு வேலை உள்ளது என்பதற்காகவே பெருமூச்சு விட வேண்டியது தான் என்ற நிலை உள்ளது.
டெக் நிறுவனங்களில் ஒருபக்கம் வேலை செய்து வரும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், புதிதாக டெக் நிறுவனங்கள் வேலை வேண்டும் என்று இருப்பவர்களுக்கும் இப்போது பெரும் சவாலாகதான் உள்ளது.
இப்படி பணிநீக்கம் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவது இந்தியா மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்துக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையில் உள்ள பணிப்போர், அதனால் ஏற்பட்டு வரும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் காரணங்களகாலும் உலக பொருளாதாரம் பாதிப்பு மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது.

ஊழியர்கள் பணிநீக்கத்தை கண்காணித்து வரும் Trueup.io தரவு நிறுவனம், 2023-ம் ஆண்டு 534 பணிநீக்க அறிவிப்புகளை டெக் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு இறுதியில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. கூகுள் நிறுவனம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவிகிதம் என 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. மைக்ரோசாட் நிறுவனம் 10,000 உழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
எல்லா டெக் நிறுவன ஜாம்பவான்களுக்கும் சவால் விடும் விதமாக அமேசான் நிறுவனம் 18,000 உழியர்கள்ளை பணிநீக்கம் செய்தது.
டிவிட்டர் நிறுவனம் எலன் மஸ்க் வசம் சென்றதில் இருந்து பல்வேறு நாடுகளில் இருந்து டிவிட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆயிரம் கணக்கான டிவிட்டர் ஊழியர்கள் தங்களது வலையை இழந்துள்ளனர். இந்தியாவிலும் மும்பை, டெல்லியில் உள்ள அலுவலகங்களை மூடிய டிவிட்டர் நிறுவனம் பெங்களூரு அலுவலகத்தை மட்டுமே இயக்கி வருகிறது.
டெல் நிறுவனம் 6,500 ஊழியர்களை நீக்கம் செய்துள்ளது. மீண்டும் 11,000 உழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் மெட்டா அறிவித்துள்ளது. டெலிகாம் நிறுவனமான எரிக்சன் 8,500 உழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கன்சல்டங் நிறுவனமான மெக்-கின்சி 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்கம் மட்டுமல்லாமல், ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவிகிதம் வரை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தங்களது பணியிடத்தை பகிர்ந்துகொள்ளுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. விப்ரோ நிறுவனம் ஃப்ரெஷர்கள் சம்பளத்தை 6.5 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக குறைத்துள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கத்தை கண்காணித்து வரும் Trueup.io தரவு நிறுவனம், 2023-ம் ஆண்டு 534 பணிநீக்க அறிவிப்புகளை டெக் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன என தெரிவித்துள்ளது. மேலும், இதன் மூலம் 1,53,005 நபர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் 2,732 நபர்கள் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு டெக் நிறுவனங்கள் மொத்தம் 1,535 பணிநீக்கத்தை அறிவித்து இருந்தன, அதில் 2,42,176 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
எப்போது இது முடிவுக்கு வரும்?
இந்த டெக் நிறுவனங்களின் பணிநீக்கம் அறிவிப்பு இன்னும் 4 மாதங்கள் வரை தொடரும். 2023-ம் ஆண்டு பாதியில் தான் முடிவுக்கு வரும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.