ஆன்மீகம்
2025 லட்சுமி – நாராயண யோகம்: 3 ராசிகளுக்கு கோடீஸ்வரம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
2025 லட்சுமி – நாராயண யோகம்: கோடீஸ்வரர்களாக மாறும் 3 ராசிகள்!
2025 ஆம் ஆண்டு புத்தாண்டின் தொடக்கத்தில் லட்சுமி – நாராயண யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் உருவாகுவதன் மூலம் பண வரவு அதிகரிக்கும், வியாபாரம் செய்யும் நபர்களுக்கு லாபம் பெருகும், குடும்பத்தில் செல்வம் நிரம்பும்.
ஜனவரி 28-ம் தேதி, சுக்கிரன் மீன ராசியில் நுழைவது, பிப்ரவரி 27-ம் தேதி புதன் மீன ராசியில் சஞ்சரிக்கும் பின்பு, இந்த லட்சுமி – நாராயண யோகம் துவங்கும். இந்த யோகம் 69 நாட்கள் நீடிக்கும்.
மீன ராசி:
மீன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி – நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் மூலம், இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு அதிகரிக்கும். வேலை, வியாபாரத்தில் லாபம் பெருகும், குடும்ப பிரச்சனைகள் தீரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கும்ப ராசி:
கும்ப ராசியின் 2-வது வீட்டில் லட்சுமி – நாராயண ராஜயோகம் உருவாகும். இதனால், இந்த ராசிக்காரர்கள் வேலையிலும் வியாபாரத்திலும் வெற்றியை பெறுவார்கள். வேலை தேடும் நபர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். புத்திசாலித்தனத்துடன் எந்தப் பிரச்சனையும் சரி செய்ய முடியும். புதிய முயற்சிகளை துவங்க சிறந்த நேரம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
மிதுன ராசி:
மிதுன ராசியின் 10-வது வீட்டில் லட்சுமி – நாராயண ராஜயோகம் உருவாகும். இதன் மூலம், தொழிலில் நல்ல வெற்றியை அடைவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பலர் சம்பள உயர்வு, பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளனர். குடும்ப பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிர்ஷ்டம் முழுமையாக ஆதரவாக இருக்கும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















