வணிகம்
யூனிட்டி மால் என்றால் என்ன? பட்ஜெட்டில் இது அறிவிக்கப்பட்ட காரணம் என்ன?

மத்திய அரசு ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நிலையில், பட்ஜெட் 2023-2023ல் மேலும் அதை விரிவு படுத்தும் விதமாக யூனிட்டி மால் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
யூனிட்டி மால் என்பது ஷாப்பிங் மால் போன்ற ஒன்று. ஆனால் இதில் எல்லா மாவட்டங்களிலிருந்து ஒரு தனித்துவமான தயாரிப்பைத் தேர்வு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான ஒரு இடமாக இருக்கும்.

budget
யூனிட்டி மால் மாநிலங்களின் தலைநகர் அல்லது பிரதான சுற்றுலா தளங்களில் மாநில அரசுகள் நிறுவும் போது மத்திய அரசு சம்மந்தப்பட்ட மாநில அரசுகளை ஊக்குவிக்கும்.
இந்த யுனிட்டி மாலில் அந்த மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் தயாரிப்புகள் மட்டுமல்லாமல் பிற மாநில தயாரிப்புகள், பிற கைவினைப் பொருட்கள், புவியியல் குறியீடு உள்ள தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.