வைரல் செய்திகள்
திரைப்படங்கள் பார்க்க ஊதியம்…!- இப்படியும் சம்பாதிக்கலாம்

பயணங்கள் தொடர்பான திரைப்படங்கள் பார்க்க இந்த காலத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது.
அப்க்ரேடட் பாயின்ட்ஸ் என்னும் டிராவல்ஸ் நிறுவனம் புதிதாக ஒரு அசத்தலான ஊதிய வாய்ப்பை அறிவித்துள்ளது. 9 திரைப்படங்கள் பார்த்து அது தொடர்பான விமர்சனங்களை சமுக வலைதளங்களைப் பதிவிட இந்நிறுவனம் 74 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
பயணம் செய்ய விரும்புவோர், திரைப்படங்கள் பார்க்க விரும்புவோர் இந்தப் பரிசுப் போட்டியில் ஈடுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவை மாறுபட்ட கண்ணோட்டத்தில் விமர்சித்து தத்தமது சமுக வலைப் பக்கத்தில் வெளியிட வேண்டும்.
இதற்கு சமுக வலைதளங்களில் நல்ல பின்தொடர்வோர் எண்ணிக்கையையும் கொண்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்க்க வேண்டிய 9 படங்கள்:
1. Eat, Pray, Love
2. Out of Africa
3. Murder on the Orient Express
4. Under the Tuscan Sun
5. Raiders of the Lost Ark
6. Catch Me If You Can
7. National Lampoon’s Vacation
8. The Italian Job
9. Midnight in Paris


















