தமிழ்நாடு
நேரில் வந்து ஆறுதல் சொல்லாமல் எப்படி தலைவராக இருக்க முடியும்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

விஜய் பங்கேற்ற தவெக பரப்புரையில், கரூரில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேரில் வந்து ஆறுதல் சொல்லாமல் எப்படி தலைவராக இருக்க முடியும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சீமான் என பலரும் கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இறங்கள் தெரிவித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் விஜய் நேரில் வராதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “நேரில் வந்து ஆறுதல் சொல்லாமல் எப்படி தலைவராக இருக்க முடியும்? பணம் கொடுத்து உயிரை வாங்க முடியுமா?” என தெரிவித்தார்.