செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம் – மகளிர் உரிமைத் தொகை பெற புதிய வாய்ப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசின் சேவைகளை நேரில் கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர், இதற்கு முன் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் 5000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு, மக்கள் மனுக்களை பெற்றுத் தீர்வு காணப்பட்டது என்று கூறினார். அதன் தொடர்ச்சியாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்காத தகுதியான பெண்கள், இந்த முகாம்களுக்கு சென்று மனு அளிக்க வேண்டும் என்றார். அப்போது அரசாங்கம் உரிய சான்றுகள் சரிபார்த்து, உதவித்தொகையை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த வாய்ப்பை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம் – தமிழக அரசு புதிய வசதி!

தமிழ்நாட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் – மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க சிறந்த வாய்ப்பு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்: மகளிர் உரிமைத் தொகை மற்றும் 43 சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: ஆகஸ்டில் அறிவிப்பு? திட்ட விரிவாக்கம் குறித்த தகவல்கள்




