தமிழ்நாடு
கொரோனா நெகட்டிவ்: மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்குசெயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளங்கோவன் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உடனடியாக சென்னை போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதயத் தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார் என கூறப்பட்டுள்ளது.