தொழில்நுட்பம்
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வெறும் ரூ.749 என்ற விலையில் வாங்கலாம்.!

பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் மூன்றாவது நாள் சிறப்பு விற்பனையை இன்று துவங்கியுள்ள பிளிப்கார்ட் நிறுவனம், பல பொருட்களுக்கு பல விதமான கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில், சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன்னினை நம்ப முடியாத விலையில் விற்பனை செய்துவருகிறது.
இந்திய சந்தையில் ரூ.14,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, தற்பொழுது பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில், இந்த விழாக்கால விற்பனையின் சிறப்பு சலுகையாக இந்த ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன்னை வெறும் ரூ.749 என்ற விலையில் உங்கள் பழைய மொபைல் போன்னை கொடுத்து, இந்த புதிய ஸ்மார்ட் போன்னை எடுத்துச் செல்வதற்கான ஒரு அறிய வாய்ப்பை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, 4 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் ஸ்மார்ட் போன், இந்த பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில் சிறப்பு எக்ஸ்சேஞ் சலுகையில் ரூ.12,250 வரை குறைக்கப்பட்டு வெறும் ரூ.749 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதலாக 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.ரூ.749 விலையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன்னை வாங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.























