வணிகம்
முந்துங்கள்.. தமிழ்நாட்டில் மின்சார வானங்கள் விலை அடுத்த 3 ஆண்டுக்குக் குறைந்த விலைக்கு வாங்கலாம்!

தமிழ்நாட்டில் மின்சாரம் வாகனம் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 2020-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் மின்சார கொள்கை அமலுக்கு வந்தது.
அதனால் தமிழ்நாட்டில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்குச் சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணத்தில் 50 முதல் 100 சதவிகிதம் வரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அது டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் மின்சார வானங்களின் விலை 15 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் விதமாக, புதிய மின்சார கொளையை 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளார்கள்.
எனவே 2025-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மின்சார வானங்கள் வாங்குபவர்களுக்குச் சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணத்தில் 50 முதல் 100 சதவிகிதம் வரை விலக்கு தொடர்ந்து வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு முதல்வர் தலைமையிலான மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது மின்சார வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.