சினிமா8 வருடங்கள் ago
சர்கார் படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிபண்டிகையான வருகிற நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ், படம் என்றாலே கதை திருட்டு வழக்கு தொடரப்படுவதும், பின்னர் படம் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெளியாவதும் வாடிக்கையாகி உள்ளது. இதேபோன்ற நிலைமை தான் தற்போது சர்கார் படத்திற்கும் வந்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாக வழக்குதொடர்ந்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டிருக்கிறார். இதையடுத்து இந்தவழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது....