Connect with us

உலகம்

கழிவறையில் உள்ளதைவிட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்: வாட்டர் பாட்டில் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Published

on

கழிவறையில் உள்ள பாக்டீரியாக்களைவிட அதிக அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டிலில் இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த waterfilterguru.com என்ற குழுவின்ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வாட்டர் பாட்டிலில் உள்ள பாக்டீரியாவை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டிலின் மூடிகள் மற்றும் உள்புறத்தில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை கண்டுபிடித்த போது பெரும் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டிலில் ஏராளமான பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது என்றும் குறிப்பாக கழிப்பறையில் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கைகளை விட சுமார் 40 ஆயிரம் மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித வாயில் இருந்து பாக்டீரியாக்கள் வாட்டர் பாட்டிலின் மூடிக்கு செல்வதாகவும் அது அங்கேயே இனப்பெருக்கம் செய்து அதிக அளவு இருப்பதாகவும் எனவே மீண்டும் மீண்டும் ஒரு வாட்டர்பாட்டலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது பெரும் ஆபத்து என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வாட்டர் பாட்டில்களில் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும் அது மனித உயிருக்கு ஆபத்தானது அல்ல என ரீடிங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியாளர் டாக்டர் சைமன் கிளார்க் தெரிவித்துள்ளார். வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்து ஒருவர் நோய்வாய்ப்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை என்றும் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வாட்டர் பாட்டிலை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமும் ஒரு முறையாவது வாட்டர் பாட்டிலை கழுவ வேண்டும் என்றும் வாரத்துக்கு ஒரு முறை சோப்பு போட்டு சூடான நீரில் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தாமல் சில்வர், வெண்கலம், பித்தளை போன்ற உலோக பாட்டில்களை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நலன் என்றும் கூறப்பட்டு வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?