ஆரோக்கியம்
ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான மீன் குழம்பு – செம்ம சுவை!
மீன் வாங்கினால் ஒருமுறை ஆந்திரா ஸ்டைலில் இப்டி செய்ங்க… ரெசிபி இதோ!
Andhra Fish Kulambu Recipe: இந்த ஆந்திரா ஸ்டைல் காரசாரமான மீன் குழம்பு சுவையில் அசத்தும். இது மிகவும் சுலபமாகவும், விரைவாகவும் தயாரிக்கப்படும் உணவாகும்.
மீன் குழம்பு என்றதும் நமக்கு எப்போதும் சமயத்தில் வரும் உணவு! மீன் பிரியர்கள் இதனை ருசிக்காமல் இருக்க முடியாது. இப்போது ஒரு சிறப்பு: உங்கள் வீட்டில் மீன் வாங்கினால் ஒருமுறை இந்த ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பை செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் இந்த கார சுவையை நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
மீன் – 250 கிராம்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1/4 கப்
பூண்டு – 4 பல்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
கருப்பு மிளகு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 3/4 கப்
பூண்டு – 1/4 கப்
தக்காளி – 1/2 கப்
செய்முறை:
- முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சீரகம், பெருஞ்சீரகம், மிளகு ஆகியவற்றை பொன்னிறமாக வதக்கவும்.
- பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதை ஒரு தட்டில் எடுத்து ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- மீண்டும் கடாயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்பு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து, மீனையும் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலை தூவி, சூப்பரான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பை பரிமாறுங்கள்.