விளையாட்டு
ENGvsIND- ஷ்ராதுல் தாக்கூர் வெளியேற்றம்… என்ன காரணம்?

இங்கிலாந்து பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்தியா வெற்றிக் கனியை ருசித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 வது நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் தோல்வி தவிர்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் அதகள திறனால் இங்கிலாந்து மிரண்டு போயுள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்தப் போட்டிகளில் இந்தியா வென்று, கோப்பையையும் தட்டித் தூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் ஆல்- ரவுண்டர்களில் ஒருவரான ஷ்ராதுல் தாக்கூர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, ‘ஷ்ராதுல் இருந்தால் அணிக்கு பேட்டிங் நல்ல பலம் இருக்கும் என்பது உண்மை தான். அதே நேரத்தில் அவர் இல்லாத போதும் அணியைத் திறம்பட கொண்டு செல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா முதல் டெஸ்டில் ரன்கள் எடுத்துள்ளது ஒரு ப்ளஸ் தான். ஒரு வீரர் இல்லையென்றால் அதை மற்றவர்கள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனக் கூறினார்.