ஜோதிடம்
சனி-சுக்கிர சேர்க்கை: 2025ல் செல்வம் சேர்க்கும் 4 ராசிகள்! உங்க ராசி இருக்கா?

சனி-சுக்கிர சேர்க்கையால் 2025ல் செல்வம் பெறப்போகும் ராசிகள்
வெளியானதாகவேத சாஸ்திரத்தில் கிரகங்களின் மாற்றம் சிலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடுகிறது. 2025ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி மற்றும் சுக்கிரன் கும்ப ராசியில் சந்திக்கும் போது, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தட்டிக் கொடுக்க உள்ளதாம்.
ரிஷபம்:
சனி-சுக்கிர சேர்க்கை ரிஷப ராசியினருக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். வருமானம் அதிகரிக்க சாத்தியம் அதிகம். தொழில் வளர்ச்சியும் லாபமும் இந்நேரத்தில் ஏற்படும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு கல்வி, வேலை, திருமணம் போன்ற அம்சங்களில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சிறந்த முடிவுகளை அடைவதற்கான காலம் இது. தொழில் மற்றும் வியாபாரத்தில் விரைவான முன்னேற்றத்தை காண முடியும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் தொழிலில் புதிய வாய்ப்புகளை சந்திக்கின்றனர். வருமானம் அதிகரித்து, சேமிப்பு முன்னேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பும். திருமணத் தகவல் கிடைக்கலாம்.
கும்பம்:
கும்ப ராசியில் சனி-சுக்கிரன் சந்திக்கிறதால் பணவரவுகள் பெருகும். ஆரோக்கியம் மேம்பட்டு, குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். திட்டமிட்டு செயல்பட்டால் தொழிலில் வெற்றியை அடையலாம்.
இந்த சந்திப்பு உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை உங்கள் ராசியின் அடிப்படையில் பார்க்கலாம்.





















