தமிழ்நாடு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் காவல் நிலையத்திலேயே கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது.
இதனை அடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதுரை ஹைகோர்ட் கிளையில் நடைபெற்று வரும் இந்த வழக்கை 6 மாதத்திற்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி தாமதமாக கிடைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்த அதிரடி உத்தரவு காரணமாக சாத்தான்குளம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சாத்தான்குளம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.











