உலகம்
மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆபிஸ், ஆப்ஸ் பயனர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை: என்ன காரணம்?

மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்ஸ் மற்றும் ஆபீஸ் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் தான் பல டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் மொபைல் போனிலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது. குறிப்பாக மைக்ரோ ஸ்பாட் நிறுவனத்தின் ஆபீஸ் மிக அதிக நபர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதும் அதில் உள்ள Word, Excel, PowerPoint, Outlook ஆகியவை மிக அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென இந்திய அரசு மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபீஸ் மற்றும் ஆப்ஸ் ஆகியவற்றின் பழைய வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகலும் மிகவும் நம்பகமானது மற்றும் பாதுகாப்பானது என்றும் பயனர்கள் எந்தவித சைபர் தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக தங்களது டாக்குமென்ட்களை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவ்வப்போது மைக்ரோசாப்ட் வழக்கமான புதுப்பிப்புகளை வெளியிடுகிறது என்பதும் அந்த புதுப்பிப்புகளை பின்பற்றுபவர்களுக்கு எந்த விதமான சைபர் தாக்குதலும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில பயனர்கள் பழைய வெர்ஷன் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது என்பதற்காக பழைய பதிப்புகளை தற்போது பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆபீஸ் ஆகியவற்றின் பழைய வெர்ஷன்களை இன்னும் அதிக நபர்கள் பயன்படுத்து வருவதை அடுத்து இந்திய அரசாங்கம் அதுபோன்ற பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் பழைய வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் தயாரிப்புகளின் பழைய வர்ஷனை பயன்படுத்துவதால் சைபர் தாக்குதல் அதிகம் நடைபெற வாக்குதல் வாய்ப்பிருப்பதாகவும் எனவே லேட்டஸ்ட் வெர்சனை மட்டும் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசியல் சேர்ந்து உள்ளது.