கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா: கோஹ்லிக்கு என்ன ஆச்சு?

இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வார்ம்-அப் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பதவி ஏற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் விராட் கோலி அறிவித்து இருந்தார் என்பதும், உலக கோப்பை டி20 போட்டி முடிவடைந்ததும் தான் பதவி விலக இருப்பதாக அறிவித்து இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலக கோப்பை டி20 போட்டியின் வார்ம்-அப் மேட்ச் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.
இன்றைய போட்டியில் விராத் கோலி, பும்ரா மற்றும் ஷமி ஆகியோர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரோஹித் சர்மா கேப்டனாக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விராட் கோலி டி20 போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அடுத்த கேப்டனாக ரோகித்சர்மா தான் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








