வணிகம்
PUMA பிராண்டு பெயர் PVMA என மாற்றம்.. என்ன காரணம் தெரியுமா?

பிரபல விளையாட்டு பொருட்கள் மற்றும் ஆடைகள் நிறுவனமான PUMA தங்களது விளம்பரங்களில் PVMA என பெயர் மாற்றம் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த மாற்றம், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற பேட்மிட்டன் வீராங்கானையான பி.வி.சிந்துவுடனான புதிய ஒப்பந்தத்தை அறிவிக்கும் விதமாக செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், உயர் தர பேட்மின்டன் ஆடைகள், காலணி மற்றும் பாகங்கள் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே, புமா பல பிரபல தடகள வீரர்களுடன் இணைந்துள்ளது. ஹர்மன் ப்ரீத் கவுர், முகமது ஷமி, சரப்ஜோத் சிங், அவனி லேக்ரா, எம்.சி.மேரி கோம் போன்றோருடன், கரீனா கபூர் கான், இப்ராஹிம் அலிகான் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் புமாவின் விளம்பர தூதர்களாக உள்ளார்கள்.
.புமா குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. விளையாட்டின் சக்தியைக் கொண்டு மற்றவர்களைத் தூண்டுவதற்கான என் கனவுகளை புமா பகிர்கிறது. இந்த ஒத்துழைப்பு, பெண்கள் உட்பட அனைவரையும் தன்னம்பிக்கையுடன் செயல்பட தூண்டும் என பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவில் பேட்மின்டன் விளையாட்டின் நிலையை மேம்படுத்தி புதிய தலைமுறையினரை ஊக்குவிப்பது என கூறப்படுகிறது.


















