கிரிக்கெட்
பிளே ஆப், பைனல் போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? புதிய விதிகள் அறிவிப்பு

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளே ஆப்போட்டிகள் நடக்கும் சமயத்தில் மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல் அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கும் போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் பிளே ஆப்போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது .
பிளே ஆப்போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட ஓவர்கள் குறைக்கப்படும் என்றும் ஐந்து ஓவர்கள் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஒரே ஒரு சூப்பர் ஓவர் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சூப்பர் ஓவர் போட்டியும் நடத்த முடியவில்லை என்றால் லீக் போட்டிகளில் அந்த அணிகள் பெற்ற வெற்றிகளை கணக்கில் கொண்டு முடிவு அறிவிக்கப்படும்.
இறுதிப் போட்டியை பொறுத்தவரை மழை பெய்தால் அடுத்த நாள் நடத்தலாம் என்பதற்காக ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவ்து மே 29-ஆம் தேதி இறுதிப் போட்டி மழை காரணமாக ரத்தானால் மே 30ஆம் தேதி நடத்தப்படும்.
அதேபோல் முதல் பாதி போட்டி முடிவடைந்த பின் இரண்டாவது பாதியில் மட்டும் நடத்த விடாமல் மழை பெய்தால் மறுநாள் இரண்டாவது பாதி மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இறுதிப் போட்டியிலும் மழை பெய்தால் 5 ஓவர்கள் ஆட்டமாக குறைக்கப்படும் என்றும் ஐந்து ஓவரும் நடத்த முடியாவிட்டாலும் ஒரே ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.