உலகம்
3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

மூன்று மாதங்களுக்கு முன்னால் 4000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிறுவனம் மீண்டும் 6 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
லேட்டஸ்ட் ஆக கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நடவடிக்கை உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது கடந்த மூன்று மாதங்களுக்கும் உள்ள 4000 ஊழியர்களை வேலநீக்கம் செய்த டச்சு மருத்துவ தொழில்நுட்ப தயாரிப்பாளர் பிலிப்ஸ் நிறுவனம் தற்போது மீண்டும் 6 ஆயிரம் பேர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

#image_title
4000 பேர் பணியாற்றம் செய்யப்பட்ட மூன்றே மாதங்களில் மீண்டும் ஒரு மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கை எடுத்தது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜாய் ஜேக்கப் அவர்கள் தெரிவித்த போது, ‘2025 ஆம் ஆண்டுக்குள் நுழைய எங்கள் நிறுவனம் கடுமையாக போராடி வருகிறது. இதனால் செலவுகளை குறைப்பதற்காக சிக்கன நடவடிக்கையாக எங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்த முடிவை எடுத்துள்ளோம்.
4000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த மூன்றை மாதங்களில் இந்த கடினமான முடிவை எடுப்பது எங்களுக்கும் எங்கள் பங்குதாரர்களுக்கும் மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, செயல் திறனை அவசரமாக அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்ட பிலிப்ஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 105 மில்லியன் யூரோக்கள் ($114 மில்லியன்) மற்றும் கடந்த ஆண்டு முழுவதும் 1.6 பில்லியன் யூரோக்கள் நிகர இழப்பை வெளியிட்டது.
130 ஆண்டுகளுக்கு முன்பு லைட்டிங் நிறுவனமாகத் தொடங்கி, சமீபத்திய ஆண்டுகளில் பிலிப்ஸ் பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது, உயர்தர மின்னணு சுகாதாரப் பொருட்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துவதற்காக தெரிவித்தது. ஆனால் அந்த மாற்றமானது அந்நிறுவனத்தை மிகப்பெரிய நஷ்டத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது.